states

img

யாருக்கும் வாக்களியுங்கள்... ஓவைசிக்கு மட்டும் வேண்டாம்.... மேற்குவங்க இமாம்கள் அறிக்கை

கொல்கத்தா:
மேற்குவங்க மாநில மக்கள் யாருக்கு வாக்களித்தாலும் சரி, ஆனால்,அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சிக்கு மட்டும் வாக்களிக்க வேண்டாம்என்று அம்மாநில இமாம்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுதொடர்பாக அந்த அமைப்பு மேலும் கூறியிருப்பதாவது:

சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் பாஜக-வுக்குஉதவி செய்யும் அசாதுதீன் ஓவைசி-யின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு, மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் யாரும் (குறிப்பாக முஸ்லிம்கள்) வாக்களிக்கவேண்டாம். ஏனெனில் ஓவைசி கட்சிக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும்,பாஜகவுக்கு விழும் வாக்குகளே ஆகும்.பாஜகவுக்கு எங்கெல்லாம் தேர்தலில் அதிக சவால்கள் உள்ளதோ,அங்கெல்லாம் களத்தில் குதித்து, அவர்களுக்கு உதவுபவராக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓவைசி இருக்கிறார். மக்கள் தாங்கள் விரும்பும் யாருக்கும் வாக்களிக்கலாம். ஆனால், இந்தமுறை கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியுள்ளது. இந்தத் தேர்தல் என்பது மேற்குவங்கமாநிலத்தின் எதிர்காலத்திற்கு மட்டுமானதல்ல; இங்கு வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் நிர்ணயிக்கக் கூடியதாக உள்ளது.இங்கே, சில சக்திகள் அமைதியைக் குலைத்து, மக்களை பிளவுப்படுத்தமுயன்று வருகின்றன. அவர்கள் வெறுப்பின் விதைகளைத் தூவுகிறார்கள்.மதரீதியாக மக்களைக் குறிவைக்கிறார்கள். எனவே, இதுகுறித்த புரிதலுக்கு நாம் வந்து, பொறுப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு இமாம்கள் கூறியுள்ளனர்.

;